தமிழ் சினிமா சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் பிரபலங்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. அந்த வகையில் வெங்கட்பிரபு டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம்தான் மாநாடு. இந்த திரைப்படம் இதுவரை 11 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் படி இயக்குனர் வெங்கட்பிரபு தனது வித்தியாசமான பாணியில் எடுத்துள்ளார் ரசிகர்கள் மற்றும் மக்களையும் தாண்டி பிரபலங்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல பாராட்டை பெற்று புகழின் மழையில் துள்ளி குதிக்கிறது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பாராத வரவேற்ப்பை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக வசூல் வேட்டையை தாறுமாறாக போய்க்கொண்டிருக்கிறது இன்னும் குறைந்த நாட்களிலேயே 100 கோடியை தொட்டு அசத்த இருக்கிறது. மாநாடு படத்தில் சிம்புவின் நடிப்பை தாண்டி நடித்த எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர். அந்த வகையில் ஒய்ஜி மகேந்திரன் எஸ் ஏ சந்திரசேகர் கருணாகரன் மனோஜ் பிரேம்ஜி கல்யாணி பிரியதர்ஷன் எஸ் ஜே சூர்யா போன்ற பலரும் படத்தின் கதையை தேவைக்கு ஏற்றவாறு..
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர். இந்த படத்தின் மூலம் அவர்களுக்கு சினிமாவுலகில் நல்லதொரு எதிர்காலம் கிடைத்துள்ளது. போராடு திரைப்படத்தைப் பார்த்த பலரும் புகழ்ந்து வருகின்றனர் சமீபத்தில் கூட பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பார்த்து விட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் மாநாடு படமும் ஹிட்டானது வெங்கட்பிரபு பார்ட்டி கொடுத்திருப்பார் என சிம்புவிடம் கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த சிம்பு இனி நான் பார்ட்டிக்கு எல்லாம் போக மாட்டேன் என குறிப்பிட்டார்.
பார்ட்டிக்கு சென்றால் மது அருந்தியது எல்லாம் ஒரு வயசு இனிமேல் பார்ட்டிக்கு செல்ல மாட்டேன் என கூறினார் பார்ட்டிக்கு போய் தாறுமாறாக சாப்பிட்டு குடித்து அதனால் தான் உடல் எடை தாறுமாறாக அதிகரித்ததாக சிம்புவே சொல்லியிருந்தார் தற்பொழுது உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் மாமிச உணவுகளை சிம்பு தவிர்த்து உள்ளதால் பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறி வருகிறார். தற்போதும் அதை கடைப்பிடித்து வருவதால் சிம்புவுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.