சுப்ரமணியபுரம் பட நடிகை என்ன ஆனார் தெரியுமா.? மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரியா.?

swathi

தமிழ் திரைப்படமான சுப்பிரமணியபுறம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஸ்வாதி இந்த படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்னவென்றால் இந்த படத்தில் வரும் கண்கள் இரண்டால் என்ற பாடல் தான்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து  தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் தெலுங்கிலும் இவர் நடித்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

பின்பு கேரளா சேர்ந்த ஒரு விமானி நபரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு குடிபோனார். திருமணம் ஆன பிறகு  இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

தற்பொழுது சமீபத்தில் ஹைதராபாத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சினிமாவில் நடிப்பதற்காக ரீஎன்ட்ரீ கொடுக்க உள்ளார் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

அதற்காக பல தயாரிப்பாளர்களிடம் பேசி வாய்ப்பு கேட்டு வருகிறாராம் என்றும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வெளிவந்துள்ளது.

மேலும் இவர் ஒரு வெப் சீரியஸ் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.