குடிச்சிட்டு அதுபோல் நடந்துகிட்டேன் அதனால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கலை.! தனிமையில் புலம்பி வரும் சுப்பிரமணியம் பட நடிகர்.!

subramaniyapuram
subramaniyapuram

தமிழ் சினிமாவை பொருத்தவரை கதை நன்றாக உள்ள திரைப்படத்தை மக்கள் எப்பொழுதும் மறக்க மாட்டார்கள் அந்த திரைப்படத்தை பற்றி பல ஆண்டுகள் கழித்து பேசினாலும் ஒளிபரப்பினால் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள். அந்த வகையில்  நல்ல கதை உள்ள பல திரைப்படங்கள்   தொலைக்காட்சியில் போட்டாள் விரும்பி பார்த்து வருகிறார்கள் மக்கள்.

அந்த லிஸ்டில் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படமும் உண்டு. இந்த திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகிவிட்டது தற்பொழுது இந்த திரைப்படத்தை ஒளிபரப்பினால் கூட மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள். அதேபோல் சமூக வலைத்தளத்தில் இந்த திரைப்படத்தில் உள்ள காட்சிகளை வைத்து பல மீம்ஸ்கள் உருவாகி வந்தன.

இந்த திரைப்படத்தை சமுத்திரக்கனி அவர்கள் இயக்கியிருந்தார் அதுமட்டுமில்லாமல் சசிகுமார், கஞ்சா கருப்பு, சுவாதி ரெட்டி, ஜெய்,  மாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் மாரி என்பவர் நடித்திருந்தார்  இவர் இந்த திரை படத்தில் டும் கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது வழக்கம்போல் டீக்கடைக்கு 4 பேர்  வந்தார்கள் அவர்கள் வந்தவுடன் என்னிடம் என்ன பண்ணுகிறீர்கள் எனக் கேட்டார்கள் அதற்கு நான் செல்லூரில் இருக்கும் ஒரு கடையில் மைக் செட் வேலை பார்கிறேன் என எகத்தாளமாக பதில் பேசினேன்.

நாங்கள் எங்களது படத்துக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறோம் நீங்கள் நடிக்க வருகிறீர்களா என கேட்டார் உடனே படத்தைப் பார்த்து கை தட்டும் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தருகிறார்கள் என்றவுடன் நானும் ஓகே சொல்லிவிட்டேன். அந்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம் அப்பொழுது தன்னை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார்கள்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிக்க அழைத்தார்கள் நானும் நடித்துக் கொடுத்தேன் சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளிவந்த பிறகு நான் சில காட்சிகளில் தான் வருவேன் என்று நினைத்தேன் ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னை ஹீரோ போல் காட்டிவிட்டார் சமுத்திரகனி.

மேலும் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நான் சொல்லிக்கொடுத்த காட்சிகளில் மட்டும் நடித்தால் போதும் என சொல்லி நடிக்க வைத்தார்கள். ஆனால் படத்தில் பார்க்கும்போது அந்த காட்சிகள் மிகவும் அற்புதமாக வந்துள்ளது எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது

சசிகுமார் அண்ணன் என் மீது அதிக கோபத்தில் இருக்கிறார்  அதற்கு காரணம் நான் தான், நான் குடித்து விட்டு பார்ப்பவர்களிடம் சசிகுமார் அண்ணன் போன் நம்பரை கொடுத்து விட்டேன். அதனால்தான் அவர் என் மீது மிகவும் கோபமாக இருக்கிறார் என நான் புரிந்து கொண்டேன் ஆனால் தற்பொழுது குடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டேன்  தற்பொழுது ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறேன் கிடைத்த வேலைகளை செய்து வருகிறேன் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஆனால் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

சசிகுமார் அண்ணா மீண்டும் என்னைக் சினிமாவில் நடிப்பதற்கு அழைப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற அந்தப் பேட்டியில் தன்னுடைய நிலைமையை எடுத்துக் கூறினார் மாறி.