சசிகுமார் தமிழ் சினிமாவில் நடிகனாகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். இவர் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ஜெய், ஸ்வாதி, சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சுப்பிரமணியபுரம் இவர் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்று வரை ரசிகர் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வெளிவரும் கத்திக்குத்துக்கு உள்ளாகிறான் அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கி நகர்கிறது. இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கிய சசிகுமார் படத்தை இயக்குவதற்கு ஓய்வு கொடுத்துள்ளார் ஏனென்றால் அதிக படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஒரு நடிகனாக பல திரைப்படங்கள் வெற்றி பெற்று வருவதால் இப்படியே கடைப்பிடித்து விடலாம் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஒரு சிலரோ இவர் இயக்கிய திரைப்படங்கள் சரியாக வெற்றி பெறாதால் பெரும் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளார் அதனால் தான் படங்களில் நடித்து வருகிறார் எனவும் கூறுகிறார்கள்.
பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இவர் நடிப்பில் உருவாகிய பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய கொம்பு வச்ச சிங்கமடா ராஜ வம்சம் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஆனாலும் தன்னுடைய விடா முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியாகிய சுப்பிரமணியபுரம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது இந்த திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிய நிலையில் தற்பொழுது இதுவரை யாரும் பார்த்திராத மேக்கிங் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.