சும்மா டீ குடிக்கப் போனேன் சுப்ரமணியபுரம் படவாய்ப்பு கிடைத்தது.! ரகசியம் உடைத்த பிரபலம் யார் தெரியுமா அவர்.!

subramaniapuram
subramaniapuram

தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் சுப்ரமணியபுரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார், படத்தில் ஜெய் சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சாகருப்பு ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, தமிழ் சினிமாவில் நல்ல படைப்பு என இந்த படத்தைப் பாராட்டினார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் டுவிட்டரில் #12yearsofsubramaniyapuram என்ற ஹாஸ்டேக் உருவாக்கி ரசிகர்கள் டிரென்ட் செய்தார்கள். இந்த திரைப்படத்தில் ‘டும்கான்’  என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை இங்கே காணலாம்.

சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மாறி. இந்த திரைப்படத்தில் இவரின் பெயர் ‘டும்கான்’ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அளித்த பேட்டியில் வழக்கம்போல் டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார் அப்பொழுது நாலு பேர் வந்தாங்க வந்து தம்பி என்ன பண்றீங்கன்னு கேட்டாங்க நானும் எகத்தாளமாக நான் செல்லூர்ல இருக்கிற மைக்செட் கடையில வேலை பார்க்கிறேன் எனக் கூறினேன்.

subramaniapuram
subramaniapuram

அதுக்கு அவங்க பொறுமையாக இல்லப்பா ஒரு படத்தில் நடிக்க ஆள் தேடிட்டு இருக்கோம் நீ நடிக்க வரியா என கேட்டாங்க, நான் படத்தை பார்த்து கைதட்டி கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி யாராவது கேட்டால் என்ன செய்வார்கள் அதே போல் நானும் வியந்து பார்த்தேன், உடனே ஒப்புக்கொண்டேன் அந்த திரைப்படம்தான் சுப்பிரமணியபுரம்.

பின்னர் என்னை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து படக்குழு சென்றார்கள் பின்பு சில நாட்கள் கழித்து தொலைபேசியில் மாரியை நடிக்க அழைத்து உள்ளார்கள், சுப்பிரமணியம் திரைப்படம் வெளியாகிய பிறகு அதில் சில காட்சிகள் தான் வருவேன் என நினைத்தேன் ஆனால் படத்தில் முக்கிய கிளைமாக்ஸ் சீனில் என்னை தான் ஹீரோ போல் காட்டினார்கள்.

இதற்கு அண்ணன் சமுத்திரக்கனி படத்தில் வரும் காட்சிகளில் இதை மட்டும் செய் என கூறி என்னை நடிக்க வைத்தார், பின்பு படத்தை பார்க்கும் பொழுது காட்சிகள் அற்புதமாக வந்து இருந்தது அதை கண்டு நான் மிரண்டு போனேன், அவருக்கு சசிகுமார் அண்ணனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் சசிகுமார் அவரின் பெயரை தான் நான் பச்சையாக குத்தி உள்ளேன். இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறினார்.