கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளது தமிழகத்திலும் தற்போது ருத்ர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது நாளுக்கு நாள் தோற்று பரவுதல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
இதனை முன்னிட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் விரைவில் ஆக்சிஜன் படுக்கை அறைகள் போன்ற பற்றாக்குறைகள் நடக்க நேரிடும் ஆனால் அதற்குள் தன்னால் முடிந்த பல நலத்திட்ட உதவிகளை பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை 1 கோடி, அஜித் 25 லட்சம் என கொரோனா நிதி உதவிக்காக கொடுத்து வருகின்றனர் இது தற்பொழுது மக்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் தன்னால் முடிந்த உதவிகளை கொடுத்து வருகின்றனர்.
சமிபத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதிகளை அளிக்க வேண்டுமென முதல்வர் கேட்டுக் கொண்டார் இதனையடுத்தே பல பிரபலங்களும் தற்போது வரை கொடுத்துக்கொண்டே வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் திலீப் சுப்பராயன் தன்னால் முடிந்த உதவிகளையும் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.
அந்தவகையில் அவர் 10 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார் தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் நிதி கொடுத்து வந்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் இவர் கொடுத்துள்ளது தற்போது மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது இவரைப் போன்ற பலரும் தங்களால் முடிந்த உதவிகளை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.