நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் லைக்கா மற்றும் எஸ்கே நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் டான் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்கியுள்ளார் பிரியங்கா மோகன், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, எஸ் ஜே சூர்யா, மனோபாலா என பலர் நடித்துள்ளார்கள். மாணவனாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா சிவகார்த்திகேயன் வாங்க பார்க்கலாம்.
படத்தின் கதை
சிவகார்த்திகேயன் படத்தில் சிறு வயதிலிருந்தே பெரிதாக படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார். அவர் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆசையையும் கனவையும் மாற்றிக் கொள்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் அப்பாவோ படித்தால் தான் வாழ்க்கை படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என கண்டிப்புடன் பேசுகிறார் அதனால் சிவகார்த்திகேயன் தன்னுடைய அப்பா மீது வருத்தம் கொள்கிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சிவகார்த்திகேயன் பள்ளியில் படிக்கும் பொழுதே பிரியங்கா மோகன் மீது காதலில் விழுகிறார். பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு போகும் பொழுது பல பிரச்சினைகளை சந்திக்கிறார். அதன் பிறகு எப்படி அந்த பிரச்சனைகளை சமாளிக்கிறார். அதற்காக கல்லூரிகளிலேயே தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி டானாக மாறும் சிவகார்த்திகேயனை எப்படியாவது விரட்டி ஆக வேண்டுமென எஸ்ஜே சூர்யா பல விஷயங்களை செய்து வருகிறார்.
அதனால் ஒவ்வொரு முறையும் இருவரும் மாறிமாறி மோதிக்கொள்கிறார்கள் இப்படி சிவகார்த்திகேயன் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கையில். தான் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்னவாகப் போகிறோம் என தனக்குள்ளே தன்னை தானே தேடிக் கொண்டிருக்கும் பொழுது தனக்குள் இருக்கும் திறமை அவருக்கு தெரிய வருகிறது அதன் பிறகு அந்தத் திறமையை வைத்து வாழ்க்கையில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
சிவகார்த்திகேயன் எப்பொழுதும் ஃபேமிலி ஆடியன்சை ஏமாற்றியதை கிடையாது அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் ஃபேமிலி ஆடியன்ஸ் ஏமாற்றவில்லை என்றுதான் கூறவேண்டும் பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் கொஞ்சம் கூட சலிக்காமல் படத்தை அழகாக கொண்டு போய் உள்ளார்கள். அழகான நடிப்பு அருமையான காமெடி , எமோஷனலாக காதல், நாடகம் ,சென்டிமென்ட் என அனைத்தையும் அழகாக நடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதேபோல் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றால் எஸ்ஜே சூர்யா தான் வழக்கம் போல் சைலண்டாக வந்து தன்னுடைய மிரட்டலான வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமுத்திரகனி ஒவ்வொரு காட்சியிலும் நம்மளை கண்கலங்க வைத்துள்ளார் அந்த அளவு அறிவுரை கூறி அப்பாவாக நடித்து மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் ராதாரவியும், மனோபாலா, சிவாங்கி என அனைவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக நடித்துள்ளார்கள். நடிகை ப்ரியங்கா மோகன் தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் ஏமாற்றலாமான காமெடி காட்சி காதல் காட்சி என ரசிகர்களிடைய ஸ்கோர் செய்துவிட்டார்.
சூரி கதாபாத்திரம் படத்தில் ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் கொண்டு சென்றுள்ளது அருமை, சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்த ஆதிரா பாண்டி லட்சுமி படத்தில் தனித்து நிற்கிறார் அந்த அளவு தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனரை பற்றி கூற வேண்டுமென்றால் இவரை அறிமுக இயக்குனர் என்று கூற முடியாது அந்த அளவுக்கு படத்தில் முழுக்க முழுக்க தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.
அழகான நடிப்பு அழகான காதல் காட்சி அழகான காமெடி காட்சி என தன்னால் எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ அந்த அளவு கொடுத்துவிட்டார் இயக்குனர். ஆரம்பத்தில் படத்தில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் போகப்போக படம் விறுவிறுப்பாக கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் கடந்துள்ளது. இசையரசன் அனிருத் பற்றி நாம் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை ஏற்கனவே படத்தில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது இந்நிலையில் படத்தில் அனிருத் இசையில் மிரட்டி விட்டார் என்று தான் கூற வேண்டும்.
அதிலும் பின்னணி இசை அருமை படத்தின் எடிட்டிங் தனித்து நிற்கிறார் நாகூரான் ராமச்சந்திரன். படத்தின் மைனஸ் என்றால் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு காமெடியில் ஒர்க் அவுட் ஆகாது சில காட்சிகள் மொத்தத்தில் டான் ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படமாக அமைந்துள்ளது.