சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரைப் பற்றி மிகவும் இழிவாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் பலரைப் பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களாக பேசி வருவதால் தமிழ் சினிமாவில் உள்ள ஏராளமானவர்கள் இவரின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
நடிகரும் பத்திரிகையாளருமான இவர் நயன்தாராவை பற்றி கூறியுள்ள தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார்.
இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இத்திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நட்பு ஏற்பட பிறகு காதலாக மாறியது. பிறகு ஏழு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் ஜூன் 9ஆம் தேதியன்று மகாபலிபுரத்தில் உள்ள பிரம்மாண்டமான ஹோட்டலில் தங்களது திருமணத்தை நடத்தினார்கள்.
இவர்களுடைய திருமணத்தில் இந்திய திரைப்பட நடிகர் நடிகைகள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள். பிறகு திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதி சென்றார்கள். அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களுக்கு விருந்து வைத்தார்கள்.
மேலும் பத்திரிக்கையாளர்களிடம் இதுவரையும் எங்களுக்கு கொடுத்த சப்போர்ட் இருக்கு நன்றி இதற்கு மேலும் எங்களுக்கு நீங்கள் சப்போர்ட் தரவேண்டும் என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து நயன்தாராவின் குடும்பத்தினை பார்ப்பதற்காக கொச்சி சென்றிருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டி ஒன்றில் கல்யாணம் நடந்தாலும் இதற்குமேல் நயன்தாராவிற்கு குழந்தை பிறக்காது. காரணம் வயது கடந்துவிட்டது நயன்தாராவிற்கு பாதுகாப்பாக வேண்டுமென்றால் விக்னேஷ் சிவன் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக நயன்தாராவிற்கு குழந்தை பிறக்காது என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். எனவே ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் பயில்வான் ரங்கநாதன் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.