சென்ற வருடம் ஆரம்பித்த கொரோனா தொற்று தற்பொழுது வரை மக்களை விடாமல் துரத்திக் கொண்டே வருகிறது ஒரு பக்கம் பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்து வருகிறார்கள் இன்னொரு பக்கம் மாணவர்கள் தங்களது படிப்பு வீணாகும் என்ற கவலையில் ஆன்லைன் வகுப்பிற்கு வீட்டிலிருந்தே பாடத்தை கவனித்து வருகிறார்கள்.
இந்த தகவல் ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே இன்னொரு பக்கம் ஆசிரியர்கள் பலரும் மாணவர்களை தப்பான வழியில் பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் ஒரு சில ஆசிரியர்கள் மாணவிகளை பா*** ரீதியாக தொந்தரவு செய்து வருகிறார்கள் இந்த குற்றச்சாட்டுகள் அதிகமாகிக் கொண்டே வருவதால் சமூக ஆர்வலர்கள் பலரும் இதனை நிறுத்தவே முடியாதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுதும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது ஆம் ஆன்லைன் மூலம் பாடங்களை சொல்லித் தருவது என்ற பெயரில் மிகவும் கேவலமான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்களாம் அதேபோல் ராஜகோபாலன் என்ற பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது பல மாணவிகள் புகார் கொடுத்துள்ளார்களாம் அதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் பிரபல நடிகரான YGமகேந்திரன் இந்த பள்ளிக்கூடத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தகவலை அறிந்த சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் பாமக உறுப்பினர் ராமதாஸ் இந்த ஆசிரியருக்கு தக்க தண்டனை எடுக்க வேண்டும் இதே போல் எத்தனை முறைதான் நடக்கும் இந்த அட்டூழியத்திற்கு ஒரு அளவே இல்லையா என குரல் கொடுத்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரி ஜெயலட்சுமி தற்பொழுது அந்த விசாரணையின் அடிப்படையில் நேரில் சென்று விசாரித்து வருகிறாராம் மேலும் இந்த பள்ளி நிர்வாகம் எந்த விசாரணைக்கும் ஒத்துவரவில்லை என்றாலும் இந்த பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியரே உடனடியாக பணியில் இருந்து விலகிக் கொண்டாராம்.
இருந்தாலும் இது பெரிய சர்ச்சையை தமிழ்நாட்டில் கிளப்பியுள்ளது இந்த தகவலை அறிந்த மக்கள்களும் இதே போல் நடந்தால் எப்படி பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியும் இதற்கு ஒரு முடிவே இல்லையா என பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.