ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக மூன்று வருடங்களை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ஆக்ஷன் சென்டிமென்ட் என சிறப்பாக இருந்ததால் படம்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது. வசூலில் 200 கோடிக்கு மேல் அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது. வலிமை திரைப்படம் இதுவரை மூன்று வாரத்தை தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுதும் படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் பெரும்பாலான திரையரங்குகளை கைப்பற்றிய ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பாண்டிய ராஜ் இயக்கி உள்ளார். படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் நிரம்பி இருப்பதால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இருப்பினும் பெரிய அளவிலான திரையரங்குகளை கைப்பற்ற முடியாமல் போயுள்ளது.
காரணம் ஒருபக்கம் வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. மறுபக்கம் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பாமக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு சில திரையரங்குகளில் படம் வெளியாகாமல் போனது இதனால் மாறி மாறி நாலாபக்கமும் எதற்கும் துணிந்தவன் படத்தை எதிர்த்து நின்றதால்..
தமிழகத்தில் மட்டும் 540 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி உள்ளது. இது வலிமை திரைப்படத்திற்கு எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை ஏனென்றால் தற்போது மூன்றாவது வாரத்தை தொட்டுள்ள போதும் வலிமை படம் 340 திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.