“வலிமை” படம் வெற்றியா.. தோல்வியா.. உண்மையை உடைத்து சொன்ன திருப்பூர் சுப்பிரமணியன்.!

valimai-
valimai-

அஜித் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தையும் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி தீர்ப்பார்கள் அப்படித்தான் வலிமை திரைப்படத்தையும் வேற லெவலில் கொண்டாடினர் படமும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல ஆக்ஷன், சென்டிமென்ட், திரில்லர் என அனைத்தும் கலந்த கலவையாக வலிமை திரைப்படம் உருவாகி இருந்தது.

ரசிகர்களை தொடர்ந்து பொது மக்களும் வலிமை திரைப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர் குறிப்பாக குழந்தைகள் பெண்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து ஆடுவது அந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்பட்டது. பொழுது  பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் வலிமை திரைப்படத்திற்கான வரவேற்பு நன்றாக போடுவதாக வினியோகஸ்தர்களும், வேற எங்க உரிமையாளர்களும்  ஒருபக்கம் கூறிக்கொண்டு வருகின்றனர்.

வலிமை திரைப்படம் நாளுக்கு நாள் வசூல் சாதனையை செய்து வருகிறது இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவருகின்றன இப்படி இருந்தாலும் வலிமை திரைப்படம் வசூல் பெறவில்லை என பல்வேறு செய்திகள், விமர்சனங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதற்கு பதிலளிக்கும் வகையில் வினியோகஸ்தர்கள் தகவல்களை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தின் வலிமை படம் ஜெயித்ததா.. தோற்றதா.. என்பது குறித்து விலாவாரியாக சொல்லி உள்ளார். அவர் சொன்னது : வலிமை திரைப்படம் 20 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் பெரிய வசூல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை உண்மையில் வலிமை திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார் மேலும் அவர் படம் கமர்சியல் ரீதியாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது இதை யாரும் மறுக்க முடியாது என அடித்துக் கூறியுள்ளார்.