அஜித் சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன அதுபோல வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது இந்த திரைப்படம் முற்றிலும் ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் கசிந்து வந்த நிலையில் தற்போது படத்தின் அடுத்தடுத்த தகவல்களை படக்குழு மற்றும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த படத்தில் அஜித் ஒரு பைக் ரேஸர் ஆக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது அஜித் பைக் ரேசர் கிடையாது ஒரு போலீஸ் என கூறினார் இயக்குனர் ஹச். வினோத். அஜித் இந்த படத்தில் போலீசாக நடிக்க வில்லை வாழ்ந்தார் என படத்தில் பணியாற்றிய பலரும் கூறி வருகின்றனர். இதனால் அஜித் இன்ட்ரோ மற்றும் அஜித் ரோல் மிக வலிமையான ரோல் இருக்கும் என தெரியவருகிறது.
படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இப்போ ரசிகர்கள் கூட வலிமை படத்தின் டீசர் டிரெய்லர் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் அதற்கு முன்பாக வலிமை படத்திலிருந்து ஒரு சூப்பர் தகவலை சொல்லி உள்ளார் வில்லன் கார்த்திகேயா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் சொன்னது இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு ஆக்சன் படத்தை யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு நிறைய ஆக்ஷன் உள்ள படமாக இப்படம் உருவாகி உள்ளது. ஒவ்வொரு ஆக்சன் மற்றும் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு விருந்து அளிக்கும் அந்த அளவிற்கு ஆக்சன் காட்சிகள் இருக்கும் கூறினார்.
அண்மையில் கூட திலீப் சுப்பராயன் வலிமை படத்தின் interval சீன் வருவதற்கு முன்பே ரசிகர்கள் சீட் நுனியில் உட்கார்ந்து இருப்பார்கள் செம்ம மாஸ் சீன் இருக்குமென என தெரிவித்தார்.