வலிமை படம் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது – வேதனையுடன் சொல்லும் கலக்கப்போவது யாரு நடிகர் சில்மிஷம் சிவா.!

siva-and-ajith
siva-and-ajithsiva-and-ajith

சமீப காலமாக விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு புதுமுகங்கள் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்துகின்றனர் ஏற்கனவே சந்தானம் சிவகார்த்திகேயன் டிடி போன்ற பல பிரபலங்கள் தடம் பதித்த வெள்ளித்திரையில் தனது திறமையைக் காட்டி அசத்தி வருகின்றனர்.

அண்மையில் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த அஷ்வின் கூட ஹீரோவாக என்ன சொல்ல போகிறேன் என்ற திரைப்படத்தில் நடித்தார் அவரை தொடர்ந்து இப்பொழுது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான சில்மிஷம் சிவாவும் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார் முதல் திரைப்படம் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து அசத்தியுள்ளார்.

வலிமை படத்தின் ஆரம்ப காட்சியிலேயே இவரை நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரு சின்ன காட்சியில் வந்து கைதட்டல் வாங்கி போவார். இந்தப் படத்தில் நடித்த நல்ல அனுபவங்கள் மற்றும் கெட்ட விஷயங்களையும் அவர் பகிர்ந்துள்ளார் அதில் அவர் சொன்னது  : கலக்கப்போவது யாரு பைனல் முடிவதற்கு முன்பாக எனக்கு அஜித் சார் படத்தோட வாய்ப்பு கிடைத்து விட்டது ஆனால் அப்ப எனக்கு அது அஜித் சார் படம்னு தெரியாதுகதை என்னன்னு தெரியாது வினோத் சார் படம் மட்டும் தெரியும்.

என்னுடைய காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது ஷூட்டிங் நடந்த அதே நாளில் கலக்கப்போவது யாரு ஒன்பதாவது பைனல் தேதி நடந்தது விடியற்காலை 4 மணிக்கே ஷூட்டிங்கை முடித்துவிட்டு 6 மணிக்கு ஃப்ளைட் பிடித்து ஹைதராபாத் போனேன் ஏர்போர்ட்டில் எப்படி போய் சேருவது என்று கூட எனக்கு தெரியாது படக்குழு தான் டிக்கெட் போட்டு எனக்கு அனுப்பி இருந்தாங்க..

சென்னை ஏர்போர்ட் முதலில் போய் சுத்தி சுத்தி பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் அங்கேயும் கடவுள் என்னை கைவிடல கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பார்த்த ரசிகர் ஒருவர் அங்கு என்னைக் கவனித்துக் எல்லா பிரச்சனைகளையும் முடித்து  கொடுத்தார். ஹைதராபாத் போனதும் வினோத் சார் என்னை அஜித் சார்கிட்ட என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

அவ்வளவு பெரிய நடிகர் அவர் உடனே வந்து எனக்கு கை கொடுத்து ஹலோ சிவா சென்று சொன்னாரு. எனக்கு அங்கேயே தல சுத்திருச்சு அஜித் சாரை பார்த்த சந்தோஷம் என்னால் தாங்க முடியல. ஒருவழியா ஷூட்டிங் எல்லாம் முடிந்து ஹோட்டலுக்கு போனேன் ஆனா எனக்கு அந்த மொழி சுத்தமா தெரியல நான் சொல்றது அவங்க புரிஞ்சுக்கல..

இவங்க கிட்ட என்னடா பண்றதுன்னு தெரியல இங்க நிக்க கூடாது என வெளியே போக சொல்லிட்டாங்க கடைசியில் மேக்கப் கலைஞர் ஒருவர் என்னை ரூமுக்கு அழைத்து சென்றார் அஜீத் சாருடன் நடித்தது மறக்க முடியாத தருணம் அதேசமயம் ஹோட்டலுக்கு போக முடியாம 3 மணிநேரம் பிச்சைக்காரன் போல ஒரு ஓரமாக சுத்திகிட்டு இருந்தேன் அந்த சம்பவம் என்னால் மறக்க முடியாது என கூறினார்