இந்தியாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார் தல அஜித். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம் அந்த வகையில் விமர்சன ரீதியாக ஒரு சில திரைப்படங்கள் தோல்வியடைந்தாலும் எப்பொழுதும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடைசியாக அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு தேவையான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மையமாக வைத்து இயக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்குரிய படமாகவும் அமைந்தது.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித் மற்றும் போனி கபூர் இணைந்து முதலில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை உருவாக்கியிருந்தார்கள் இத்திரைப்படம் சூப்பர்ஹிட் பெற்றதால் இரண்டாவது படத்திலும் இருவரும் ஒன்றிணைந்து உள்ளார்கள்.
அதோடு இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது.
அந்த வகையில் மும்பையில் உள்ள கால் பந்து மைதானம் ஒன்றில் பெரிய செட் போடப்பட்டு வந்தது இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் வந்த டவுதே புயலால் அனைத்தும் நாசமாகி சேதமடைந்து விட்டது. இந்த செட்டில் 40க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளார் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பித்து விட்டார்கள்.
இது ஒருபுறம் மகிழ்ச்சியாக அமைந்தாலும் இதன் மூலம் தயாரிப்பாளர் போனி கபூருக்கு இரண்டு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.