போஸ்டர் வெளிவருவதற்கு முன்பாக மற்ற வேலையை சைலன்டாக முடித்த வலிமை படக்குழு.? ஷாக்கான தல ரசிகர்கள்.! வெளிவந்த உண்மை செய்தி.

ajith
ajith

நடிகர் அஜித் ஹச். வினோத்துடன் இணைந்து இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் எடுக்க இருந்தது ஆனால் சூழலில் சரி இல்லாததால் படக்குழு காத்திருந்து காத்திருந்து ஒருகட்டத்தில் பட குழுவே கடுப்பாகி விட்டது.

மேலும் ரசிகர்கள் வேற அப்டேட் கேட்டு வந்ததால் படக்குழு தற்பொழுது அதிரடியான முடிவுகளை கையில் எடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும் ஒரு பக்கம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் ரிலீஸ் ஆகும் தேதி வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் இறுதி கட்ட படப்பிடிப்பை முடிக்க படக்குழுவும் அதிகம் ஆர்வம் காட்டி உள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

இது இப்படி இருக்க படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளி வருவதற்கு முன்பாக மற்ற வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது அதாவது வலிமை படக்குழு சேட்டிலைட் உரிமம் மற்றும் தியேட்டர் உரிமம் ஆகியவற்றை விற்று விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த மாதம் தான் வெளியாக உள்ளது அதற்குள் பல வேலைகளை கனகச்சிதமாக முடித்து உள்ளதால் தல ரசிகர்கள் தற்போது சந்தோஷம் இருகின்றனர்.