“வலிமை” முன்பதிவு இந்தியாவில் தொங்காமல் இருக்கின்ற நிலையில் வெளிநாட்டில் மாஸ் காட்டிய சம்பவம்.

valimai
valimai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. காரணம் ஒரு பக்கம் டாப் ஹீரோ அஜித் என்றால் மறுபக்கம் இயக்குனர் ஹச். வினோத் இரண்டு பேருமே..

திறமை வாய்ந்தவர்கள் என்பதால் வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பு  உலக அளவில் இருந்தது. ஒரு வழியாக இரண்டு வருடங்கள் கழித்து வலிமை படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது பல்வேறு அப்டேட்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து படக்குழு. வலிமை  படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், glimpse வீடியோ, அம்மா பாடல், வேற மாதிரி பாடல், வலிமை மேக்கிங் வீடியோ என வெளியான அனைத்தும் ரசிகர்கள் கொண்டாட வைத்தது.

மேலும் படக்குழுவும் வலிமை படத்தை ஜனவரி 13 ம் தேதி பொங்கலை முன்னிட்டு விடுகிறோம் என அறிவித்தது.  அந்த சமயம் பார்த்து கொரோனா மூன்றாவது கட்ட அலை தீவிரம் அடைந்ததை அடுத்து படத்தின் தேதியை மாற்றி வைத்துக் கொள்ளலாம் என அஜித்தும், படக்குழுவும் அறிவித்தனர். ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிதும் சோகம் அடைந்தனர்.

ஆனால் அந்த சோகத்தை உடைத்தெறியும் வகையில்  ஒருவழியாக குறைந்த நாட்களிலேயே அதாவது வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்தது. வலிமை படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தியாவையும் தாண்டி உலக அளவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வலிமை காட்சிக்கான முன்பதிவு துவங்காத நிலையில் ஜப்பான் நாட்டில் திரையரங்கில் படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது இதன் மூலம் உலகம் முழுவதும் அஜித் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.