விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ஆரி.இந்நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆரியே வெற்றியாளராக 50 லட்ச ரூபாய் என்றார்.
இவர் இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டைசுழி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம் உட்பட இன்னும் சில படங்களில் நடித்திருந்தார்.
இவர் நடித்த திரைப்படங்களில் நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தான் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்ற இவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்தது. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு உடல் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ஆரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. அந்தவகையில் இவர் தற்பொழுது பகவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பகவான் திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அனைத்து போட்டியாளர்களும் இணைந்து வெளியிட்டார்கள்.
அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக நேற்று திருவண்ணாமலை செஞ்சி கோட்டைக்கு அருகில் சூட்டிங்க எடுக்கப்பட்டது. அதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஷூட்டிங் பார்ட்டுக்கு வந்து ஆரியுடன் உரையாடி,புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.
அவ பொழுது எடுத்த வீடியோ ஒன்றை ஆரி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.