தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சர்தார், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதனை முன்னிட்டு இந்த படத்தின் பிரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தியிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது.. அதில் ஒன்றாக உயிர் உங்களுடையது தேவி என பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வசனம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
இது குறித்து உங்கள் மனைவி என்ன சொன்னார் என கார்த்தியிடம் கேட்டனர் இதற்கு பதில் அளித்த அவர்… ரொமான்ஸ் இல்லாத கதையில் நீங்க நடிக்க மாட்டீங்களா.? என ஏ பார் நான் ரொமான்ஸ் இல்லனான வாழ்க்கை போரடிக்காதா என சொல்லிப் பார்ப்பேன் அதுக்கு என் மனைவியும் வீட்டில் மட்டும் தான் ரொமான்ஸ் வரமாட்டேங்குது சொல்லுவாங்க..
முதல் முறையா பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு வந்தியதேவன் எல்லாத்தையும் பார்த்து ஜொள்ளுவிடுறான் ஆனா ரொம்ப கண்ணியமா இருக்கான் அப்படி அவர்கள் சொன்ன வார்த்தை ரொம்ப பெரிய வார்த்தை அதேபோல என் அம்மாவும் படத்தைப் பார்த்துவிட்டு பெருசா ரிசல்ட் கொடுக்க மாட்டாங்க.. எங்க அப்பா சிந்து பைரவி நடிச்சப்ப கூட அம்மா பெரிய ரிசல்ட் சொல்லல..
அதேபோல என் அண்ணன் நந்தா படம் நடிச்சப்பா கூட பெருசா ரிசல்ட் ஒன்னு கொடுக்கல.. எங்கம்மா முதல் முறையா பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் என்று சொன்னார்கள் அதனால் தான் இந்த படம் இவ்ளோ பெரிய ஹிட் என்று கார்த்தி கூறினார்.