தென் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் T20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் மண்ணை கதியது இதனை தொடர்ந்து அடுத்த போட்டியிலாவது பழிவாங்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது போட்டி தொடங்கியது.
முதல் இன்னிங்சை தொடங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் குயின்டன் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் ஆடினார். தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் சதத்தை அடித்தார். இதனை தொடர்ந்து மேலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்க நினைத்த குவின்டன் டி காக் அவர்கள் ஆறாவது ஓவரில் அடம் சபா வீசிய பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்தார்.
அந்த பந்து சிக்சரை நோக்கி போய்க் கொண்டிருப்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து இருதனர் ஆனால் எல்லைக்கோட்டில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் அவர்கள் தனது அசாத்த திறமையால் அந்த பந்தை பிடித்து எல்லைக் கோட்டுக்குள் போட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். அவரது சிறந்த பில்டிங்கை பார்த்த பல பிரபலங்கள் பாராட்டியும், புகழ்ந்தும் வருகின்றனர்.இதனை தொடருந்து.
அவரை அடுத்து வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இதனால் அந்த அணி ஒட்டுமொத்தமாக 158 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் ஐ தவிர வேறு எவரும் சிறப்பாக விளையாடாததால் அந்த அணி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் சிறந்த பங்களிப்பை அளித்ததால் அவர்களால் இந்த எளிய இலக்கை இவர்களால் எட்ட முடியவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் தோல்வி அடைந்ததை கண்டு பலர் விமர்சித்து வந்துள்ளனர். இருப்பினும் பலர் ஸ்டீவ் ஸ்மித்தின் சிறந்த பில்டிங்கை பார்த்து பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Ludicrous fielding from Steve Smith pic.twitter.com/Ykepk6bNTv
— Mac – The Return (@MacTheReturn1) February 23, 2020
This is just unbelievable fielding from Steve Smith.
Don’t think I’ve seen better. #Superman pic.twitter.com/FtfzhcuTwz— The Oracle (@BigOtrivia) February 23, 2020