மருத்துவமனையில் விவேக் இருக்கும் போது அவரது உடல்நிலை மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கை.!

vivek1
vivek1

காமெடி நடிகர் விவேக்கின் இறப்பு குறித்து தற்போது சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் அவரது இழப்பை தாங்க முடியாமல் தனதுடன் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமா உலகில் எத்தனை நடிகர்கள் காமெடி நடிகராக வலம் வந்தாலும் இவரை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்ற அளவிற்கு தனது நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார் இவர் நடிக்கும் திரைப்படங்களில் ரசிகர்களுக்கு சமூக அக்கறை கொண்ட ஒரு கருத்தை எல்லா திரைப்படங்களிலும் கூறியிருப்பார்.

இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலமடைந்த விவேக் நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி உள்ளார்கள் இந்நிலையில் சமீபத்தில் இவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டுள்ளாராம் இந்நிலையில் அந்த தடுப்பூசி தாங்கமுடியாமல் விவேக் உயிரிழந்து விட்டார் என பல வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் விவேக் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருந்து தற்பொழுது ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது

ஆம் அதில் விவேக் தடுப்பூசி போட்டுகொண்டதால் உயிரிழக்கவில்லை அவருக்கு மாரடைப்பு திடீர் என்று ஏற்பட்டு ECMO என்ற சிகிச்சை அளிக்கப்பட்டு  திடீரென்று சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்து விட்டார் என மருத்துவ மனையில் இருந்து ஒரு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

sims
sims

அதுமட்டுமல்லாமல் விவேக்கின்  ரசிகர்கள் பலரும் விவேக் நடித்துள்ள திரைப்படங்களில் காமெடி கருத்துக்களை கூறும் சீன்களை தற்போது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.