side actor : பொதுவாக இன்று சினிமாவில் பல பிரபலங்கள் மிக எளிதாக நுழைந்து விடுகிறார்கள் ஆனால் அன்றைய காலகட்டத்தில் முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் சினிமாவில் தன்னுடைய திறமையால் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார்கள் அந்த வகையில் சினிமாவில் பல ஹீரோக்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்களை இங்கே காணலாம்.
2004 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஆயுத எழுத்து இந்த திரைப்படத்தில் கார்த்தி துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் தாம் தூம் இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருவி அதிதி பாலன் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2000 ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் குஷி இந்த திரைப்படத்தில் ஷாம் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் சித்தார்த் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
2011 ஆம் ஆண்டு வெளியாகி ஆடுகளம் திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் சந்தானம் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2003 ஆம் ஆண்டு பிரசாந்த் வடிவேலு நடிப்பில் வெளியாகிய வின்னர் திரைப்படத்தில் சூரி ஒரு ஓரமாக நடித்திருந்தார்.
1997 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் மின்சார கனவு இந்த திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
1986 ஆம் ஆண்டு வெளியாகிய வசந்த ராகம் திரைப்படத்தில் தான் இயக்குனர் சங்கர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் 2001 ஆம் ஆண்டு வெளியாகிய பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் சமுத்திரகனி துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
1970 ஆம் ஆண்டு வெளியாகிய தேனும் பாலும் திரைப்படத்தில் கவுண்டமணி துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படி பல நடிகர்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து முன்னேறி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.