எனக்கு பிடித்த படத்தில் நடித்து “நானே கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டேன்” – வெளிப்படையாகச் சொன்ன ஸ்ருதி ஹாசன்.?

shruthi-haasan-
shruthi-haasan-

சினிமா உலகை பொறுத்தவரை வாரிசு நடிகர், நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து இருக்கிறது அதே சமயம் அந்த பிரபலங்கள் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொண்டு கடினமாக உழைக்கின்றனர் அந்த லிஸ்டில் தற்போது முதன்மையானவராக இருந்து வருபவர் தான் நடிகை சுருதிஹாசன் அப்பாவை போல இவரும் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய வருகிறாராம்.

நடிகை,  பாடகர் என தனக்கு தெரிந்த வற்றில் தன்னை இணைத்துக் கொண்டு வெற்றிமேல் வெற்றியைக் கண்டு வருகிறார் நடிகையாக இவர் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையிலும் வெற்றியை ருசித்து வருகிறார். முதலில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் அதனைத் தொடர்ந்து அஜீத், விஜய் போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.

இப்பொழுது கூட நடிகை சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் கைகோர்த்து சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருந்த சுருதிஹாசனை ரசிகர்கள் தற்போது ஒருபக்கம் கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

காரணம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த பிரேமம் படத்தின் ரீமேக் தெலுங்கில் படமாக எடுக்கப்பட்டது இதில் சாய்பல்லவி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தார். ஆனால் சாய்பல்லவி அளவிற்கு நடிகை சுருதிஹாசன் சிறப்பாக நடிக்கவில்லை என கூறி ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சுருதிஹாசன் இது குறித்து அவர் விலாவாரியாகப் பேசி உள்ளார்.

பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முதலில் நான் நடிக்கக் கூடாது என யோசித்தேன் ஏன் என்றால் பிரேமம் படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் இந்த படத்தில் சாய்பல்லவி யின் கதாபாத்திரம் வேற லெவல் அதில் அவர் நடிப்பு சிறப்பாக இருந்தது.

தெலுங்கில் ரீமேக் ஆகும் போது நான் யோசித்தேன் அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது அதனால் எனக்கு ஏற்றவாறு அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தேன் அது மக்களுக்கு பிடிக்கவில்லை முதல் தடவையாக ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறேன் இது எனக்கு ஒரு நல்ல பாடம் என கூறினார்.