இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15 வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும் என தெரியவருகிறது. இதுவரை 8 அணிகள் தான் இருந்து வந்துள்ளன.
தற்போது இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாட இருக்கின்றன. இதனால் போட்டிகள் நடத்தபடுவதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு செம்ம விருந்தாக அமைய இருக்கிறது. மேலும் இந்திய வீரர்கள் பல்வேறு அணிகளில் சேர்க்கப்படுவது மற்றும் இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் டெல்லி கேப்பிடல் அணியிலிருந்து பிரபல நட்சத்திரமும், அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயர் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் கடைசியாக நடந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் செய்து இருந்தார்.
கேப்டன்ஷிப் இன்னும் டெல்லி கேப்பிடலில் எது சிறந்த வெற்றியை பெற்று தந்ததால் தற்போது டெல்லி கேப்பிடல் நிர்வாகம் ரிஷப் பண்ட் அவர்களை கேப்டன்னாக தொடர வைக்க பேச்சுவார்த்தை நடத்தப் படுகிறது இதை அறிந்து கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்தால் எனக்கு கேப்டன்ஷிப் கொடுங்கள் இல்லை என்றால் நான் வேறு அணிக்கு செல்ல இருக்கிறேன் என மறைமுகமாக கூறியுள்ளார்.
டெல்லி கேப்பிடல் அணி பெரும்பாலும் ரிஷபத்துக்கு அதிக வாய்ப்புகளை கொடுப்பதால் ஸ்ரேயாஸ் ஐயர்வேறு அணிக்கு தாவி அங்கு கேப்டன்ஷிப் பிடிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது இச்செய்தி தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.