சமீபகாலமாக இளம் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் இளம் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின் இவர் நடிப்பில் வெளியாகிய ஒரு சில திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக உருமாறி உள்ளது அதிலும் டாடா திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் தான் ஸ்டார் இந்த திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் கவின் பியார் பிரேமா காதல் திரைப்படத்தை தொடர்ந்து இளன் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார் மேலும் லால் அதிதி, ப்ரீத்தி முகுந்தன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.இந்த திரைப்படத்தில்சாதாரண மனிதன்அசாதாரணமான கனவு பற்றிய இந்த திரைப்படத்தை மிகவும் அழகாக இயக்கி உள்ளார் என முதல் நாளிலிருந்து வசூலில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகிய நான்கு நாட்களில் பதினாறு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அதேபோல் ஒரு இளம் நடிகரின் திரைப்படம் இந்த அளவு வசூல் வேட்டை நடத்தியுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
அதேபோல் படத்தின் முதல் நாளிலேயே நல்ல வசூல் கிடைத்ததால் அடுத்தடுத்த நாளில் வசூல் அதிகரித்தது இந்த நிலையில் இந்த வார வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் பாக்ஸ் ஆபஸ் வல்லுநர்கள் கணித்துள்ளார்கள்.