மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும் நட்சத்திர பவுலர் – சிக்கி சின்னாபின்னமாக போகும் மற்ற IPL அணிகள்..

mumbai indians

கிரிக்கெட் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் இந்தியாவில் பெரிய அளவில் நடத்தப்படும் போட்டி என்றால் அது IPL தான். இது சீசன் சீசன்னாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் வெகு விரைவிலேயே 16 வது சீசனையும் தொடங்கப்பட இருக்கிறது.

அதற்கு முன்பாக ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணிக்கும் சில விதிமுறைகளை கொடுத்துள்ளது அதாவது சிறந்த 8 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என சொல்லி உள்ளது அதன்படி ஒவ்வொரு அணியும் தலைசிறந்த வீரர்களை தகவைத்துக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட் மற்றும் ஒரு சில முக்கிய வீரர்களை கழட்டி விட்டுள்ளது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவருக்கு மும்பை அணி பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை கொடுத்திருக்கிறது. இந்த முறை ஐபிஎல் – ல் சிறப்பாக ஜொலிக்க மும்பை இந்தியன்ஸ் அணி பல திட்டங்களை வகுத்து வருகிறது.

அதற்கு வலு சேர்க்கும் வகையில்  வேகப்பந்து பேச்சாளர் ஜோப்ரா ஆச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட இருக்கிறார். கடந்தாண்டு இவர் மும்பை இந்தியன்ஸ் அணி 8 கோடி கொடுத்து கைப்பற்று இருந்தாலும் அவர் காயத்தின் காரணமாக விளையாடவில்லை ஆனால் தற்பொழுது அவர் குணமடைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் எனவே இந்த ஆண்டு ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவது உறுதி..

jofra archer
jofra archer

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா போன்ற நட்சத்திர பவுலர்கள் இருந்து வந்த நிலையில் தற்போது இருவரும் கைகோர்ப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு தொடர் வெற்றிகளை குவிப்பதோடு மட்டுமல்லாமல் கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் சரி, ரசிகர்களும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.