விருது வாங்கிய வைரமுத்துவிற்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்.! கிண்டலடித்த சின்மயி.. கல்யாண போட்டோவை வெளியிட்டு பங்கம் செய்த காஜல்.!

chinmayi

தமிழ் சினிமாவில் பல கவிதைகள் மற்றும் பாடல்களை எழுதி மிகவும் பிரபலம் அடைந்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் எழுதிய பாடல்கள் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவில் மிகப் பெரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருது சிறந்த மலையாள இலக்கிய உலகில் தேசிய விருதாக கருதப்படும் ஓ என் வி குரூப் நினைவாக கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக இந்த விருது மலையாளம் கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது இந்த விருது முதல் முறையாக ஒரு தமிழகத்தை சேர்ந்த அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பொதுவாக ஞானபீடம் பெரும் கவிஞர்களுக்கு மட்டுமே ஓஎன்வி விருது வழங்கப்பட்டு வந்தது ஆனால் வைரமுத்துவின் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கியுள்ளார்கள். வைரமுத்து இந்த விருதை வாங்கியதற்கு பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் வைரமுத்துவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vairamuthu
vairamuthu

ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது தமிழ் நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு onv விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் வெற்றி பாதையை வகுத்து இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்  கவிஞர் வைரமுத்து.

vairamuthu

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வைரமுத்து மீது குற்றச்சாட்டு இருப்பதால் அவருக்கு இந்த விருது வழங்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் இதில் வைரமுத்து மீது புகார் கொடுத்த சின்மயி சும்மா இருப்பாரா என்ன. ஸ்டாலினை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு வாவ் எனக்கூறி  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நடிகையும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் மான காஜல் சின்மயி திருமணத்தில் வைரமுத்து கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படத்தை பகிர்ந்து வாவ் என பதிவிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர் ஒருவர் சின்மயி வைரமுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோவை வெளியிட்டு இன்னும் எரியிற நெருப்பில் என்னையை ஊற்றி உள்ளார். சின்மயி வைரமுத்து மீது புகார் கொடுத்துள்ளார் எனக் கூறியது ஒருபுறமிருந்தாலும் எதற்காக திருமணத்தில் வைரமுத்து அழைக்கப்பட்டார் என்ற கேள்வி அனைவரிடமும் நிலவிவருகிறது.

vairamuthu