ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரீலிஸ் தேதியை லாக் செய்த எஸ் எஸ் ராஜமௌலி.? எப்ப மிரட்ட வர்றாங்க தெரியுமா.? கொண்டாத்தில் ரசிகர்கள்.

RRR-
RRR-

சினிமாவுலகில் ஒரு சில இயக்குனர்கள் தயாரிக்கும் படங்களை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் காத்துக் கிடப்பார்கள். அந்த வகையில் சிறப்பான படங்களை குடுத்து இதுவரை மக்களை மகிழ்வித்து வருபவர் பிரம்மாண்ட இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி.

இவர் இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதைத்தொடர்ந்து ராஜமௌலி தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர்களை வைத்து ஆர். ஆர். ஆர் என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து வருகிறது.

ஆரம்பத்தில் சிறப்பாக ஷூட்டிங்கை தொடங்கினாலும் கொரோனா தொற்று காரணமாக சற்று தள்ளி கொண்டே போனது இருப்பினும் படக்குழு தொடர்ந்து போராடி ஒரு கட்டத்தில் முடித்தது. தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதியை லாக் செய்துள்ளது.

அதன்படி ராஜமவுலியின் ஆர். ஆர். ஆர் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என கூறி ஒரு மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ராஜமவுலி முதல்முறையாக தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் மேல் நம்பிக்கை வைத்து எடுத்து உள்ளனர்.

இந்த படத்தை இந்திய அளவில் இருக்கும் ரசிகர்கள் மற்றும் மக்கள்  காண எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இச்செய்தியை தற்போது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.RRR-