குறைந்த விலைக்கு சொகுசு காரை வாங்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி.!

raja mouli
raja mouli

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கி,  இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் வெற்றி பெற செய்தவர்தான் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது  இதனால் தற்போது தென்னிந்திய சினிமாவில் இயக்குனராக தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் பல கோடி பட்ஜெக்டில் உருவாக்கி அதை விடவும் பல மடங்கு வசூல் செய்து மிகப்பெரிய சாதனை பெற்று வருகிறது.  அந்த வகையில் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்திற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த மிகப்பெரிய சாதனை படைத்தது.  இவ்வாறு சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படங்கள் இரண்டுமே பல கோடி வசூல் செய்ததால் இவருக்கு சம்பளம் நூற்றுக்கணக்கான கோடிகளில் கிடைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதாவது  Volvo Xc40 SUV  இந்த காரை தான் எஸ்எஸ் ராஜமௌலி வாங்கியுள்ளதாக இந்த காரின் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த காரின் விலை வெறும் 52 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

raja mouli 1
raja mouli 1

ஒரு சில கோடிகள் மட்டுமே சம்பளமாக ஹீரோக்கள் கூட பல கோடிகளில் சொகுசு கார் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு 100 கோடிக்கு அதிகமாக சம்பளம் வாங்கும் எஸ்எஸ் ராஜமௌலி இவ்வாறு குறைந்த 52 லட்ச ரூபாய்க்கு மட்டுமே சொகுசு கார் வாங்கியவுள்ளார்.எனவே ஊடகங்கள் இவ்வளவு எளிமையானவரா என்று எஸ்எஸ் ராஜமமௌலி என்று ஆச்சரியப்படுகிறார்கள் இந்த தகவல் நான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.