நடிகை சுருதிஹாசன் சமீப காலமாக திரை உலகில் நடிக்காமல் இருக்கிறார் அதற்கு காரணம் சமீப ஆண்டு காலமாக இவர் காதல் வலைகளில் சிக்கி சின்னாபின்னமான தான் என தெரியவருகிறது அதிலிருந்து மீண்டுவர முடியாமல் இவர் வீட்டிற்குள்ளேயே தனது அறையை விட்டு வெளியே வராமல் அங்கேயே கதி என பல நாட்களை ஓட்டினார்.
அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைத்து சூம்பிப் போன பெண் போல் மாறி ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். தற்பொழுது இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு உள்ள சுருதிஹாசன் எடுத்தவுடனேயே பட வாய்ப்பை கைப்பற்றாமல் போட்டோ ஷூட் நடத்தி தனது ரசிகர்கள் பட்டாளத்தை பெருகிக் கொண்டு பின் களத்தில் இறங்க ரெடியாக இருக்கிறார்.
இப்படியிருக்க அவரது அப்பா கமல் தனது 232 ஆவது படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் இந்த திரைப்படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர் இவர்களுடன் இணைந்து சுருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் சமீப காலமாக இருந்து வந்த நிலையில் அதற்கான பதிலை தற்போது சுருதிகாசன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய சுருதிகாசன் எனது அப்பா நடிக்கும் “விக்ரம்” படத்தில் எனக்கு இதுவரையிலும் எந்த ஒரு வாய்ப்பும் வரவில்லை அப்படி வந்தால் நான் அதை ஏற்று நடிப்பேன் என கூறி உள்ளார்.