தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ஒரு நடிகை திடீரென சினிமாவில் இருந்து விலகினால் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் ஏனென்றால் சினிமா உலகில் இருக்கின்ற இளம்நடிகை கூட நாம் எப்பொழுது சிறப்பான படங்களை கொடுத்தவர் மற்ற நடிகைகளை விட முன்னேறி வருவோம் என்பதை பற்றிதான் யோசிப்பார்கள்.
ஆனால் அதை சற்றும் யோசிக்காமல் இருந்து உள்ளார் ஸ்ருதிஹாசன். சினிமா உலகில் முன்னணி என்ற அந்தஸ்தைப் பெற்று வைத்திருந்த ஸ்ருதிஹாசன். காதல் வயப்பட்டதால் தெனிந்திய சினிமா உலகில் கிடைத்த அனைத்து பட வாய்ப்பையும் உதறி தள்ளிவிட்டு சினிமாவுக்கு சிறிதுகாலம் லீவு போட்டு ஊர் சுற்றினார். இதனால் அவரது மார்க்கெட் மிகப்பெரிய அளவில் கீழே இறங்கியது.
இதிலிருந்து மீண்டு வர தற்போது தெலுங்கு சினிமா பக்கம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் கிராக் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் அதை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிவரும் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் கடைசியாக லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தமிழில் பெரிய அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் அவ்வபொழுது சமூகவலைத்தள பக்கத்தில் தனது காதலுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சுருதிஹாசன் அவரது முதுகுக்கு பின்னால் புதிதாக ஒரு பச்சை குத்தியுள்ளார். அவரது முதுகில் அவர் ஸ்ருதி என அழகாக பச்சை குத்திய அந்த புகைப்படம் எடுத்து தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.