உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் கால் பதித்த நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் ஏழாம் அறிவு திரைப்படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்ததால் இவர் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றார்.
எப்படியாவது தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி பல முன்னணி நடிகைகளை முந்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ருதிஹாசன் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்து எப்படியோ ஒரு வழியாக தமிழில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார்.
தமிழைத் தவிர்த்து இவர் தற்பொழுது பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்னதான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் ஒரு சிலரை காதலித்து ஏமாந்து போய் விட்டார் என தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் தோல்வியால் ஒரு சில காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ருதிகாசன் திடீரென மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார் அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழை தவிர ஒரு சில மொழி திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் இவர் நடிக்கும் திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.
#shruthihaasan pic.twitter.com/1Sw7HWYNqv
— Tamil360Newz (@tamil360newz) August 22, 2021
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் பாக்ஸிங்கில் ஆர்வம் காட்டி வருகிறாராம் சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ் போல இவரும் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு நடனமாடிக் கொண்டே சண்டை போடும் போது எடுத்த வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் நிஜமான டான்சிங் ரோஸ் தான் என கமெண்ட் செய்வது மட்டுமல்லாமல் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.