உலக நாயகன் கமலஹாசன் சினிமா உலகில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் சமிப காலமாக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு அனைத்து விதமான வற்றிலும் தனது திறமையை காட்ட ரெடி ஆகி உள்ளார் என்று தான் கூற வேண்டும் இப்பொழுது உலகநாயகன் கமலஹாசன்.
அரசியல், சின்னத்திரை தொகுப்பாளர், வெள்ளித்திரையில் தயாரிப்பாளராகவும் பயணிக்கிறார். அதையும் தாண்டி கதர் ஆடைகளை விற்க அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தை படைத்துயுள்ளார். இப்படியே தொடர்ந்து அடுத்தடுத்து தனது செயல்களை பிரமாண்ட பரப்பி கொண்டே போகிறார்.
இப்படி எல்லாத்தையும் பெற்றுக் கொண்டு வரும் இவர் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் இதற்கு இடையில் அமெரிக்கா சென்று திரும்பிய போது அவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதையடுத்து அதை அவரே உறுதிப்படுத்து விட்டு பின் மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டார்.
மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை pic.twitter.com/DlVCEZSRfe
— ரமேஷ்முருகேசன் (@rameshibn) November 24, 2021
தற்போது அவருக்கு சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ரசிகர்கள் அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர் இதற்கிடையில் நடிகை சுருதிஹாசன் தந்தையின் உடல் நலம் குறித்து ஒரு புதிய பதிவை போட்டுள்ளார் அதில் அவர் கூற வருவது அப்பாவின் உடல்நிலை சீக்கிரம் சரியாக நீங்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
Thankyou for all your wishes and prayers for my fathers health 🙏 He is recovering well and is looking forward to interacting with all of you soon !!
— shruti haasan (@shrutihaasan) November 24, 2021
அவர்கள் அனைவருக்கும் நன்றி அவர் நலமுடன் இருக்கிறார் விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார் இதற்கிடையில் கமலஹாசன் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது அதில் கூற வருவது : கமல் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளது இதனால் கமல் ரசிகர்கள் வெகு விரைவிலேயே அவர் நல்லப்படியாக வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.