ஒரு சில நிமிடம் நடிப்பதற்கு பல லட்சம் சம்பளமாக கேட்ட ஸ்ருதிஹாசன்.! யார் படத்தில் தெரியுமா.?

surithi-haasan

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் சுருதி ஹாசன்.இவர் முதல் முதலில் தெலுங்கில் தான் கதாநாயகியாக நடிக்க அவதாரம் எடுத்தார் அதன் பின்பு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி அதன் மூலம் இவர் ரசிகர்களிடையே தமிழில் தனது முகத்தை பதிய வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

மேலும் மார்க்கெட் உச்சத்தில் இருந்த சுருதிஹாசன் திடீரென்று பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் தற்பொழுது கிடைக்கும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒரு சில நிமிடங்கள் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இவரைப்பற்றி பரபரப்பான ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்து வெளிவந்துள்ளது.

அந்த தகவல் என்னவென்றால் இவர் பவன் கல்யாண் நடித்துவரும் வக்கீல் சாப் என்ற திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்கள் நடிப்பதற்கு படக்குழுவினர்கள் இவரை சந்தித்தார்களாம் அப்பொழுது அந்த திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் நடிப்பதற்கு 70 லட்சம் கேட்கிறாராம்.

இவர் சாதாரணமாக ஒரு திரைப்படத்தில் நடித்தால் மட்டுமே எழுத லட்சம் வாங்கலாம் ஆனால் இவர் ஒரு சில நிமிடங்கள் மட்டும் நடிப்பதற்கு 70 லட்சம் கேட்டுள்ளார் அதற்கு படக்குழுவினரும் ஓகே சொன்னதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

surithi haasan
surithi haasan