srikanth : சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நடிகைகள் ஆரம்ப காலகட்டத்தில் நன்றாக நடித்துவிட்டு சிறிது காலத்திலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள் அந்த லிஸ்டில் பல நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த் அழகு நடிப்பு திறமை என அனைத்தும் இருந்தாலும் சரியாக கதை தேர்ந்தெடுக்காமல் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ரோஜா கூட்டம் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்ரீகாந்த் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் முதல் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது அதனால் சினிமாவில் வாய்ப்புகள் தொடர்ந்து இவருக்கு கிடைத்து வந்தது.
சங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நண்பன் இந்த திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் நண்பன் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை அப்படியே ஒரு சில திரைப்படங்கள் கிடைத்தாலும் அது தோல்வியில் தான் முடிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த பேட்டியில் அவர் கூறிய விஷயம் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த பேட்டியில் தான் மிஸ் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை கூறியுள்ளார் அந்த வகையில் அவர் 12b லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகிய ரன் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து ஆகிய திரைப்படங்கள் தான் மிஸ் செய்த திரைப்படங்கள் எனகூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அஜித் சார் நடிக்க இருந்த நான் கடவுள் திரைப்படத்தில் அஜித்திற்கு பிறகு நான்தான் நடிக்க இருந்தேன் ஆனால் கடைசியில் அந்த வாய்ப்பும் கைமீறி போய்விட்டது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் கதை எனக்காக தெலுங்கில் எழுதப்பட்டது சில காரணங்களால் அந்த திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போனது என நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இப்படி ஸ்ரீகாந்த் மிஸ் செய்த திரைப்படங்கள் அனைத்தும் வேறொரு நடிகர் நடித்து மாபெரும் ஹிட் அடித்துள்ளது அதனால் இந்த திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தால் அவரின் வாழ்க்கை வேறு திசையை நோக்கி சென்று இருக்கும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.