சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பிரபலம் அடைந்தவர்கள் உண்டு அதே போல் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பெயரும் புகழும் கிடைத்தாலும் காணாமல் போன நடிகர்களும் உண்டு.
அந்தவகையில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களைக் கூறலாம் இவர் தமிழில் முதன்முதலாக ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி. ரசிகர்கள் மனதில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
ரோஜாக்கூட்டம் திரைப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு,போஸ் வர்ணஜாலம் கனா கண்டேன். என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், பின்பு ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் படத்தில் நடிப்பதற்கு சிறிது காலம் இடைவெளி விட்டார்.
கடைசியாக இவர் சவுக்கார் பேட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ரசிகர் மனதில் எப்படியாவது மீண்டும் ஹீரோ என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். அதனால் வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுத்தார் அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.
இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு ஒரு சூப்பரான கதை ஒன்று அமைந்துள்ளது, அதாவது திரில்லர் கதை கொண்ட படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க இருக்கிறாராம், அந்தத் திரைப்படத்திற்கு எக்கோ என பெயர் வைத்துள்ளார்கள் இந்த படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக வித்யா பிரதீப் என்ற நாயகி நடிக்க இருக்கிறார்.
இவர் ஏற்கனவே அருண் விஜய்யின் திரைப்படத்தில் நடித்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த திரைப்படத்தை நவீன் கணேஷ் என்பவர் இயக்கியிருக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திரைப்படம் ஆவது இவருக்கு கைகொடுக்கும் என பெரிதும் காத்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.