4 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா.? வெளிவந்தது “ரைய்டு” படத்தின் போஸ்டர்

sree-divya

ஸ்ரீதிவ்யா குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் ஹீரோயின்னாக நடிக்க தொடங்கினார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஹீரோயின்னாக என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததோடு மட்டுமல்லாமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, மாவீரன் கிட்டு என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்ததால் இவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது. அதன் காரணமாக இவருக்கு ரசிகர்களும் அதிகம் உருவாகினர். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு பக்கத்திலும்..

தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து தொடர்ந்து வெற்றியை ருசித்தாலும் இவர் 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படமும் அவருக்கு கிடைக்கவில்லை.. திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போனாதால் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடன் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும்.

நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவரிடமும் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு ஓடினார். ஒரு வழியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பட வாய்ப்பை கைப்பற்றி நடித்துள்ளார் ஆம் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ரைடர் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

இந்த படம் வெற்றி பெரும் பட்சத்தில் ஸ்ரீதிவ்யா மீண்டும் தனக்கான இடத்தை பிடித்து தொடர்ந்து படங்களில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். அந்த படத்தின் போஸ்டர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

sree-divya
sree-divya