தல அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவது வழக்கம் சினிமாவாக இருந்தாலும் சரி சினிமாவை தாண்டி நிஜத்திலும் இருந்தாலும் சரி அவர்களுக்காக என்ன வேணாலும் செய்யக்கூடியவர்கள் அஜித் அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து தற்போது போனி கபூர் மற்றும் ஹச். வினோத் ஆகியோர்களுக்கு பட வாய்ப்பை அள்ளிக் கொடுத்துக் கொண்டே வருகிறார்.
அதிலும் போனி கபூர் அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார் என கருதப்படுகிறது நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்த பிறகு தற்போது வலிமை திரைப்படத்தை தயாரிக்கவும் அஜித் ஒப்புக்கொண்டுள்ளார் இதைத் தொடர்ந்து அடுத்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் அருண் காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் article 15 திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் வேறு ஒரு புதிய படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது இப்படி தொடர்ந்து படங்களை தயாரித்து வெற்றி கண்டு வரும் போனிகபூர் குடும்பங்களில் விஷயத்தில் மட்டும் சிக்கி சின்னாபின்னமாகி வருவதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.
ஸ்ரீதேவிக்கு முன்பாக மோனா கௌரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் போனி கபூர். இந்த தம்பதிகளுக்கு அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என ஒரு மகன், மகள் இருக்கின்றனர். தமிழில் சிறப்பாக வந்த ஸ்ரீதேவி ஹிந்தி பக்கம் செல்லும் பொழுது அந்த படங்களில் நடித்தார் அந்த படத்தை போனிகபூர் தயாரித்தார் அப்போது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார் போனிகபூர்.
இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் கபூர் ஸ்ரீதேவி மீது செம கோபத்தில் இருந்தால் அதனை ஸ்ரீதேவியும் நன்கு உணர்ந்து கொண்டு அவரிடம் பேச மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஸ்ரீதேவி இறந்த பிறகு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இருவரையும் தன் சொந்த தங்கைகள் போல் பார்த்து பராமரித்து அவர்களுக்கு தேவையானதை வழங்கிவருகிறார் அர்ஜுன் கபூர்.
குழந்தைகளை அப்பாவின் வளர்ப்பை விட அம்மாவின் வளர்ப்பு சிறப்பாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் அதுபோலவேதான் அப்பாவின் வளர்ப்பு சரியில்லை என்பதால் அந்த இரு மகள்களையும் தற்போது இவரும் அவரது அம்மாவும் கவனித்துக் கொண்டு வருகின்றனர் இதனால் செம அப்செட்டில் ஆகியுள்ளார். அர்ஜுன் கபூர் சினிமாவில் தற்போது கவனிக்கத்தக்க கூடிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் மேலும் தனது தங்கைக்கு ஏற்ற அண்ணனாகவும் வலம் வருகிறார்.