தமிழ்சினிமாவில் 80 90 காலகட்டங்களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா இவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மற்ற நடிகைகளுக்கு போட்டியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலிருந்து ஸ்ரீபிரியா அவர்கள் தனது கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களை திக்குமுக்காட செய்து வந்ததை தொடர்ந்து அவர் கூறிய காலத்திலேயே தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் கமல்,ரஜினி போன்றோரின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபலமாகி வந்து கொண்டிருந்த ஸ்ரீபிரியா திடீரென மலையாள நடிகரான ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் இருப்பினும் ஒருசில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நானும் இருக்கிறேன் என அவ்வப்பொழுது காட்டிக் கொண்டு வந்தார் ஸ்ரீபிரியா அதுமட்டுமில்லாமல் மாலினி 22, பாளையங்கோட்டை போன்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தனது மகளான சினேகா சேதுபதியை அறிமுகப்படுத்தினார். சினேகாவை பார்த்த பிரபலங்கள் சினிமாவில் நடிக்கவந்தால் ஸ்ரீபிரியாவை விட மிக பிரமாண்டமாக வலம் வருவார் என கூறிக் கொண்டு வந்தனர். தற்பொழுது அவர் லண்டனில் வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்று இருக்கிறார் இந்த நிலையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என கேட்டதற்கு பெரிய வழக்கறிஞராகஆவதே குறிக்கோள் என கூறி சினிமா உலகிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இருப்பினும் ஸ்ரீபிரியாவின் மகளான சினேகா சேதுபதியின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ புமைப்படம்.