தற்போது உள்ள இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீதிவ்யா.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை ஓரளவிற்கு சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
தற்பொழுது சில காலங்களாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந் தற்பொழுது லக் என்று கூட சொல்லலாம் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிருத்விராஜின் படமான ஜனகணமன திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன் மூலம் ஸ்ரீதிவ்யா மீண்டும் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்று கூறலாம். இதனை அறிந்த ஸ்ரீதிவ்யாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.