Sri divya new look photo: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதிவ்யா இவர் 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இவருக்கு பின் வந்த நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் திடிரேனே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க தொடங்கினார். இதன் காரணமோ என்னவோ ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்பு குறைந்தது இன்னொரு காரணமும் உண்டு ஏனென்றால் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்க உள்ளார். இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்தும் படவாய்ப்பு இல்லாததற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
கவர்ச்சியாக நடிக்க இருந்தாலும் தனது உடலுக்கு செட்டாகாது என்பதால் நடிக்க மறுத்து உள்ளார் என கூறியிருந்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்பொழுது தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி குடும்ப பாங்காக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி. இவரது ரசிகர்கள் ஸ்ரீதிவ்யா திரும்பவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என கூறிவருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.