சகோதரி மாதிரி தான் எனக்கு ஸ்ரீதேவி.! அந்தர் பல்டி அடித்த கமலஹாசன்

kamal

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு பெயர் போனவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் இடம் பெற்றுள்ளார்கள்.  இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் வெற்றி வாகை சூடி உள்ளன.  அதேபோல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் அலைமோதும்.

அந்தவகையில் கமல் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த திரைப்படங்களான சகலகலாவல்லவன், 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம் என பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது. அதேபோல் ஒரு திரைப்படம் வெற்றியடைந்துள்ளது என்றால் அந்த படத்தில் இருவரின் பங்கு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவர்களின் கெமிஸ்ட்ரி என்றே கூறலாம்.

இருவரின் ஜோடி  கூட அப்படிதான் கமல் மற்றும் ஸ்ரீதேவி ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனால் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நல்ல நண்பர்கள் குடும்ப நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று ஆனால் இவர்கள் இருவரைப் பற்றியும் பல கிசுகிசுக்கள் அப்போதிலிருந்தே அதிகமாக பேசப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் என பலரும் வதந்தியைக் கிளப்பியது உண்டு இதனை ஸ்ரீதேவி மற்றும் கமலஹாசன் எதையும் கண்டுகொள்ளாமல் போற போக்கில் அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி தனது மகளை திருமணம் செய்து கொள்ள கமலஹாசன் இடம் கேட்டதாகவும் அதற்கு கமலஹாசன் மறுப்பு கூறியதாகவும் கூறியுள்ளார் மேலும் திரும்பத் திரும்ப கமலஹாசனை ஸ்ரீதேவி அம்மா அவ்வாறு கேட்டதால் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக பழகி விட்டோம் குடும்பத்தில் உள்ள ஒருவரை மணந்து கொள்வது சரியல்ல என கூறிவிட்டாராம்.

sridevi
sridevi

13 வயதில் ஸ்ரீதேவியை கமல் சந்தித்துள்ளார் அப்பொழுது மூன்று முடிச்சு திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த நேரத்தில் கமலஹாசன் மிகப் பெரிய நடிகராக இருந்தார் ஸ்ரீதேவி கமல் சார் என்று தான் அழைப்பார். இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் வதந்தியை கிளப்பி அதில் குளிர்காய பார்க்கிறார்கள் சில விஷமிகள். ஏற்கனவே ஸ்ரீதேவி பற்றி பேசும்பொழுது வேதனை அடைந்ததாக கமல் கூறியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மேலும் ஸ்ரீதேவி தனது சகோதரி மாதிரி   ஸ்ரீதேவியின் அம்மா எனக்கு சாப்பாடு வழங்கியுள்ளார் இதுபோன்ற தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என பேசி முற்றுப்புள்ளி வைத்தார்.