பொதுவாக நடிகைகள் என்றால் சினிமாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அடக்க ஒடுக்கமாக மட்டும் படித்தால் போதாது அந்த நடிகை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் கூட கவர்ச்சி இருந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்க முடியும் அப்படி இருந்தால் மட்டுமே ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் ஒரு சில நடிகைகள் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டு தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருபவர்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் ஒருவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வந்தார்.
இவர் என்னதான் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் இவர் பெரிதாக கவர்ச்சியில் ஆர்வம் காட்டாத காரணத்தினால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா பக்கமே தலை காட்டாமல் வாழ்ந்து வருகிறார்.
அந்த வகையில் ஸ்ரீதிவ்யா வெள்ளித்திரையில் மட்டும் தான் நடித்து வருகிறார் என்று நினைத்து வருகிறோம். ஆனால் இவரைப் பற்றிய நமக்கு தெரியாத தகவல் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஸ்ரீதிவ்யா முதல் முதலில் தெலுங்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய வந்த thoorpu velle rulle என்ற சீரியலில் நடித்து உள்ளார்.அதன் பிறகு தான் இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.