தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் அது எந்த விளையாட்டை சார்ந்த திரைப்படங்கள் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
வெண்ணிலா கபடி குழு :- இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன், சூரி, கிஷோர் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் கபடி போட்டியை மையமாக வைத்து உருவாக்கியுள்ளனர். மேலும் இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு இந்த படம் தான் முதல் திரைப்படம்.
ஜீவா:- இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் தான் இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.
ஈட்டி :- ரவி அரசி இயக்கத்தில் அதர்வா மற்றும் ஸ்ரீதிவ்யா நரேன் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் தான் ஈட்டி. இந்த திரைப்படம் ஒரு தடகள வீரர் தடை தாண்டும் ஓட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
கனா:- அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் கனா இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் அவர்கள் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
நட்பே துணை:- ஹிப் ஹாப் தமிழன் ஆதி நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இறுதிச்சுற்று :- பெண் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் இறுதிச்சுற்று. இந்த திரைப்படத்தில் மாதவன் ரித்திகா சிங் ஆகியோர் இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
பிகில் :- அட்லீ இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் விஜய், நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
சார்பட்டா:- இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி ஆகியோர் முக்கிய ராதா பாத்திரத்தில் நடித்த திரைப்படம் சார்பற்ற பரம்பரை. இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
மேலும் நதி, களத்தில் சந்திப்போம், கென்னடி கிளப், சென்னை 28, வல்லினம், ஆடுகளம், கில்லி, எம் குமரன் s/o மகாலட்சுமி, எதிர்நீச்சல், பத்ரி,லீ, மான் கராத்தே, பூலோகம், ஆகிய திரைப்படங்கள் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.