சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் படங்கள் வெள்ளி திரையில் தான் வெளிவந்து போட்டி போடுகிறது என்ற பார்த்தால் சின்ன திரையிலும் இதே நிலவரம் தான். வெள்ளி திரையில் படங்கள் மோதி வெற்றியை கண்ட பிறகு இந்த புதிய படங்கள் சின்னத்திரையில் விசேஷ நாட்கள் அடுத்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
இதில் எந்த படம் அதிக பார்வையாளர்களைப் பெற்று டிஆர்பிஎல் உச்சத்தை அடைகின்றன என பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் என்றால் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் லேட்டஸ்ட் படங்களை தொலைக்காட்சிகள் ரிலீஸ் பண்ணுகின்றன இதன் மூலம் டிஆர்பிஎல் நல்ல ரேட்டிங் எடுத்துக் கொள்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த தீபாவளியை முன்னிட்டு டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகின இதில் டிஆர்பி யில் அதிகம் ரேட்டிங் எடுத்த படம் எது என்பது குறித்து தற்பொழுது நமக்கு தகவல் கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக நாம் பார்ப்போம்..
1. இந்த தீபாவளி அன்று அதிக ரேட்டிங் பெற்று முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் தளபதி விஜயின் பீஸ்ட் – 12.62 (முதல் முறை).. 2. நடிகர் அஜித்குமார் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் விசுவாசம் இந்த படம் வெளிவந்த பல வருடங்கள் ஆகினாலும் தீபாவளி என்று வந்துவிட்டால் விசுவாசம் திரைப்படம் சின்னத்திரையில் வெளிபரப்பப்படுகிறது அப்படி இந்த வருடத்திலும் ஒளிபரப்பப்பட்டது இந்த படத்தை மட்டுமே சுமார் 10. 27 (7 முறை).
3. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அருணாச்சலம் இந்த படம் இந்த தீபாவளி முன்னிட்டு வெளிவந்து தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தை மட்டும் 9.21 (பலமுறை) இந்த படம் தீபாவளி என்றால் வெளிவந்துள்ளது. 4. சிவகார்த்திகேயனின் டாக்டர் 6.97 (மூன்று முறை).. 5. கமலின் விக்ரம் 4.42 (முதல் முறை) 6. டான் – 3.63 (முதல் முறை) 7. கேப்டன் – 2.35 (முதல் முறை)