விவேக் குறித்தும், மலேசியா டூ அம்னிஷீயா படம் பற்றியும் பேசிய எம். எஸ் பாஸ்கர்.! வைரல் நியூஸ்.

m.s.-baskar
m.s.-baskar

தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கியவர் எம்எஸ் பாஸ்கர் இவர் பெரிதும் காமெடியனாகவும் அதே சமயம் அப்பா, சித்தப்பா, போன்ற  குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் நேற்று வெளியாகிய திரைப்படம் மலேசியா டூ அம்னிஷீயா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவருடன் இணைந்து வைபவ் கருணாகரன் வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் தற்பொழுது மக்களின் ஆதரவைப் பெற்று சிறப்பாக பயணிக்கிறது.

இந்த நிலையில் யூட்யூப் தளத்திற்கு தனது பேட்டியை கொடுத்துள்ளார் எம்எஸ் பாஸ்கர். முதலில் இந்தப் படம் குறித்து பேசினார். இந்த படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணன் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் எனக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டது அன்றிலிருந்து இன்று வரை எங்களது நட்பு வலுவாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது அதனால் அவரது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வரும் அப்படிதான் இந்த திரைப்படமும் அமைந்தது என குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜலசமாதி இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே 50 விருதுகளை தன் வசப்படுத்தியுள்ளது இந்த படம் முழுக்க முழுக்க தலை முடியை வைத்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேசிய அவர் விவேக் பற்றியும் பேசி உள்ளார் எனது மகளின் திருமணத்திற்கு நான் அவரை நேரில் சென்று அழைத்தேன். அப்போது அவர் நான் நிச்சயம் திருமணத்திற்கு வருகிறேன் என்று கூறினார்.

ஆனால் அவரது இறப்பு எங்களைப் பெரிதும் காயப்படுத்தியது என குறிப்பிட்டார். மேலும் மறைந்த காமெடி நடிகர் நெல்லை சிவாவை பற்றியும் பேசினார் டப்பிங் வேளை போது எனக்கு அவருக்கும் பழக்கம். மிகப்பெரிய நட்பாக அப்பொழுது உருவானது அவரது இழப்பையும் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

தற்பொழுது நிலவும் சூழல் சரியில்லாத தால் அதற்கு ஏற்றார் போல மக்கள் வீடுகளை இழந்து இதை விரட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.