சின்னத்திரையின் பிரபல சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியல் நாளுக்கு நாள் புதுப்புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது ஒன்று சேர்ந்து விடுவார்கள் போல தெரிகிறது.
சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் பாரதிகாக கத்தி குத்து வாங்கி ரத்தம் சொட்ட நின்ற கண்ணம்மாவை பார்த்து துடிதுடித்துப் போய் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அவரே ட்ரீட்மென்ட் செய்தார் பாரதி. இதனால் பாரதி தற்போது தன்னால் தான் கண்ணம்மாவிற்கு இப்படி ஆகியது என மிகவும் மன வருத்தத்தில் உள்ளார்.
மேலும் சமீபத்தில் வெண்பா ஹேமாவிடம் பாரதிக்கு இன்னொரு துணை வேண்டும் என ஹேமாவை குழப்பியதால் ஹேமாவும் தனது அப்பாவிற்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைத்து வருகின்றனர். இதனிடையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கு தெரியாமல் சௌந்தர்யா வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்தக் குழந்தை தான் பாரதியையும் கண்ணம்மா வையும் ஒன்று சேர்க்கும் என கூறியிருந்த நிலையில் தற்போது ஹேமா தனது அப்பா அம்மா இவர்கள்தான் என தெரியாமலே பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைக்க ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் பாரதி கண்ணம்மாவை நினைத்து கொண்டு இருக்கும் நிலையில் ஹேமாவும் பாரதியிடம் சென்று சமையல் அம்மா.
மிகவும் நல்லவர்கள் அவங்க நம்ம குடும்பத்துல இருக்குற எல்லோரையும் நல்லா பாத்துப்பாங்க என கூறி வருகிறார். இதனால் கூடிய விரைவில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.