Trailers that crossed the highest audience in South Indian cinema : தென்னிந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட ட்ரெய்லர்கள் என்னென்ன என்று இங்கே லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ் ஹீரோவாகவும் பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆகவும் நடித்திருந்த திரைப்படம் தான் “ராதே ஷியாம்” இந்தத் திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 23.20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
அதேபோல் மகேஷ் பாபு கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் “சரக்கு வாரி பட்டா” இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது அதேபோல் இந்த திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 26.77 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “வாரிசு” இந்த திரைப்படத்தில் விஜய் அவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் வம்சி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் அதேபோல் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 23.10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
எச் வினோத் இயக்கத்தில் அஜித் மஞ்சு வாரியர், அமீர், பாவணி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “துணிவு” இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 28 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்தது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் “பீஸ்ட்” இந்த திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லியோ” இந்த திரைப்படத்தில் திரிஷா, மிஸ்கின், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 31.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. எங்கே பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் சாதனையை லியோ முறியடிக்காதோ என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது இந்த லியோ ட்ரைலர்