சமீபகாலமாக தென்னிந்திய சினிமா உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மக்களை கவர்ந்து இழுக்கின்றன அதன் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையையும் அந்த திரைப்படங்கள் அள்ளுகின்றன.
அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் எஸ் எஸ் ராஜமமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அவரை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் கே ஜி எஃப் 2 திரை படத்தை எடுத்திருந்தார் முதல் பாகம் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது படத்திற்கான எதிர்பார்ப்பு.
இந்திய அளவில் அதிகரித்திருந்தது படம் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து ஒருவழியாக ஏப்ரல் 14 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது இந்த படம் எதிர்பார்த்த விட சிறப்பாக இருந்ததால் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை கேஜிஎப் 2 திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய சினிமாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிரமாண்ட வெற்றியை பெறுகின்றன குறிப்பாக தென்னிந்திய சினிமா படங்கள் தற்போது பாலிவுட் பக்கம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி 2 திரைப்படம் மற்ற இடங்களைக் காட்டிலும் பாலிவுட்டில் நல்ல வசூலை அள்ளியது.
பாகுபலி 2 திரைப்படம் அங்கு மட்டுமே 510 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது அதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் வெளியான தங்கல் திரைப்படம் பாலிவுட்டில் 387 கோடி வசூல் செய்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது சமீபத்தில் வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் தற்போது 373 கோடி வசூல் செய்த மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது வெகு விரைவிலேயே இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என தெரியவருகிறது. தென்னிந்திய திரைப்படங்கள் பலவும் பாலிவுட்டை ஆளுகின்றன என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.