தென்னிந்திய இயக்குனர்கள் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை எடுக்கின்றனர் அந்த படங்களும் வெளிவந்து அசால்டாக 500 கோடி, 1000 கோடி வசூல் செய்கிறது. அப்படி தென்னிந்திய இயக்குனர்கள் இயக்கத்தில் வெளிவந்து 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் குறித்து பார்ப்போம்..
ராஜமௌலி : ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் பிரபாஸை வைத்து எடுத்த பாகுபலி படததை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்தார். வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இரண்டாவது பாகம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அடுத்து இவர் எடுத்த RRR படமும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது அடுத்து ஒரு பிரம்மாண்டமான ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார்.
பிரசாந்த் நீல் : தெலுங்கு இயக்குனரான இவர் கன்னட நடிகர் யாஷ் அவர்களை வைத்து KGF என்னும் படத்தை எடுத்தார். படம் வெளிவந்து இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று 500 கோடிக்கு மேல் கலெக்சன் அள்ளியது அடுத்த சில மாதங்களிலேயே பார்ட் 2 படமும் வெளியாகியது. இந்த படம் 1000 கோடிக்கு மேல் கலெக்ஷன் அள்ளி அசத்தியது. அடுத்து இவர் பிரபாஸை வைத்து சலார் என்னும் படத்தை உருவாக்கி வருகிறார் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.
அட்லீ : தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த இவர் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை எடுத்தார். அவருடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்கோத்ரா, பிரியா மணி..
யோகி பாபு என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் முதல் நாளில் 125 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் வேட்டையாடியது உலகம் முழுவதும் தற்பொழுது வரை 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.