Sai pallavi : தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் அஜித் விஜய் இருவருமே ஒரே நேரத்தில் திரைக்கு வந்தவர்கள் ஆரம்பத்தில் ஜோடியாக நடித்தாலும் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே போட்டிகள் அதிகமாக எழுந்தது அதனால் தனித்தனியாக படம் பணி வருகின்றனர்.
இருவருமே கடைசியாக பொங்கலுக்கு மோதினார் இதில் இரண்டு படங்களுமே வெற்றியை பெற்றது. பல நடிகர் நடிகைகள் அஜித், விஜய் படங்களில் நடிக்க காத்துக் கிடக்கின்ற நிலையில் ஒரு நடிகை மட்டும் அஜித் விஜய் படத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் அது பற்றி விலாவாரியாக பார்ப்போம்..
அந்த நடிகை வேறு யாரும் அல்ல சாய் பல்லவி தான்.. இவர் பெரும்பாலும் நடிக்கும் படங்களில் அவருக்கு முக்கியமான ரோல் இருக்கிறதா என்று தான் பார்ப்பாராம்.. இல்லையென்றால் எவ்வளவு பெரிய ஸ்டார் நடிகரின் படமாக இருந்தாலும் நடிக்கவே மாட்டாராம் அப்படிதான் விஜயின் வாரிசு படத்திற்காக சாய் பல்லவியை அணுகி உள்ளனர்.
கதையில் உங்களான கதாபாத்திரம் கம்மி ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு வருவீர்கள் விஜயுடன் அவ்வபோது தென்படுவீர்கள் எனக் கூறியுள்ளனர். இதனை கேட்ட சாய் பல்லவி முடியவே முடியாது என கூறிவிட்டாராம் அதன் பிறகு லியோ படத்தில் கேட்டார்கள் படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதால் இதற்கு சாய் பல்லவிக்கு பெரிய ரோல் இருக்காது என்பதால் முடியாது என மறுத்து விட்டாராம்.
இதே போல் தான் அஜித்தின் துணிவு மற்றும் வலிமை படத்தில் நடிக்க அணுகி உள்ளார்கள் ஆனால் இந்த இரண்டு படங்களிலும் நடிகை ஆக்சன் பண்ண வேண்டும் அது சாய் பல்லவிக்கு செட்டாகாது என்பதால் இந்த இரண்டு படத்தையுமே நிராகரித்து விட்டாராம்.